Nilamlink

விதிமுறைகள் & நிபந்தனைகள்

நவம்பர் 2026

முக்கிய அறிவிப்பு

Nilamlink நில தகவல் தொடர்பு & முகவர் இணைப்புத் தளமாக செயல்படுகிறது. தளத்தில் உள்ள நில முகவர்கள் சுயாதீனமானவர்கள்; Nilamlink ஊழியர்கள் அல்ல.

Nilamlink பெயரில் எந்த முகவரிடமும் பணம் செலுத்த வேண்டாம்.

ஆவண நிலை என்பது அரசு இணையதளப் பதிவுகளுடனான ஒப்பீடு மட்டுமே; அது சட்டக் கருத்தோ உரிமை உத்தரவாதமோ அல்ல.

பத்திரப்பதிவு / பணம் செலுத்துவதற்கு முன், அனைத்து நில ஆவணங்களையும் (Patta, EC, Approval) உங்கள் சொந்த சட்ட ஆலோசகர் (வழக்கறிஞர்) மூலம் சுயமாக சரிபார்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

1. நாங்கள் யார்

Nilamlink தமிழ்நாட்டு நில விவரங்களுக்கான தகவல் தளம் மற்றும் உதவிச் சேவை. நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள், நில முகவர்கள் ஆகியோரை இணைத்து, ஆவணங்களைப் பார்த்து, பத்திரப்பதிவு வரை ஒருங்கிணைத்து உதவுகிறோம். இந்தத் தளத்தைப் பயன்படுத்தினாலோ, படிவத்தை அனுப்பினாலோ இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்.

2. நாங்கள் செய்வது

  • உங்கள் விவரங்களைப் பெற்று, பொருத்தமான நிலம் அல்லது ஆளுடன் உங்களை இணைக்க உதவுதல்.
  • நீங்கள் தரும் ஆவணங்களைப் பார்த்து, அரசு பதிவுகளுடன் ஒப்பிட்டு, முன்னேற்றம் பற்றித் தெரிவித்தல்.
  • பேச்சுவார்த்தை, ஆவண ஏற்பாடு, பத்திரப்பதிவு ஆகியவற்றில் உடன் இருந்து ஒருங்கிணைத்தல்.
  • உங்கள் பதிவு நிலையைப் பதிவு எண் மூலம் பார்க்க வசதி தருதல்.

3. நாங்கள் செய்யாதது

  • "சரிபார்க்கப்பட்டது" என்றால், ஆவணங்கள் எங்களுக்குக் கிடைத்து, நாங்கள் பார்த்தோம் என்று மட்டுமே பொருள். நிலத்தின் உரிமைக்கு உத்தரவாதம் அல்ல.
  • நாங்கள் சட்ட ஆலோசனை தருவதில்லை. பெரிய முடிவுக்கு முன் உங்கள் வழக்கறிஞரிடமும் சார்பதிவாளர் அலுவலகத்திலும் நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • விலை, லாபம் அல்லது விற்பனை நடக்கும் என்று வாக்குறுதி தருவதில்லை.

4. உங்களைத் தொடர்பு கொள்ளுதல்

  • நீங்கள் தந்த மொபைல் எண்ணில் அழைப்பு, SMS, WhatsApp அல்லது Telegram மூலம் உங்கள் பதிவு தொடர்பாக மட்டும் தொடர்பு கொள்வோம்.
  • தேவையற்ற விளம்பரங்களுக்கு உங்கள் எண்ணை பயன்படுத்த மாட்டோம்; மூன்றாம் நபர்களுக்கு விற்க மாட்டோம்.
  • உங்கள் வேலையை முடிக்க தேவைப்படும்போது மட்டும், தொடர்புடைய முகவர் அல்லது எதிர்த் தரப்புடன் உங்கள் விவரங்கள் பகிரப்படலாம்.
  • உங்கள் விவரங்களை நீக்க வேண்டுமானால் கீழே உள்ள எண்ணில் எங்களிடம் கேளுங்கள்.

5. உங்கள் தகவல் & புகைப்படங்கள்

  • நீங்கள் தரும் புகைப்படங்களையும் ஆவணங்களையும் எங்கள் குழு மட்டுமே பார்க்கும். உங்கள் சம்மதம் இல்லாமல் பொதுவில் வெளியிடப்படாது.
  • பொதுப் பக்கங்களிலும் அறிவிப்புகளிலும் பெயர், தொலைபேசி எண் போன்றவை காட்டப்படாது.
  • மேலும் விவரத்துக்கு எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பாருங்கள்.

6. உங்கள் பொறுப்பு

  • சரியான, உண்மையான தகவலையும் ஆவணங்களையும் மட்டுமே தர வேண்டும்.
  • உங்களுக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க பதிவு செய்யக்கூடாது.
  • தவறான அல்லது போலியான தகவல் தந்தால், உங்கள் பதிவை நீக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.

7. நில முகவர்கள்

எங்களுடன் உள்ள நில முகவர்கள் தனித்து இயங்கும் உறுப்பினர்கள்; Nilamlink ஊழியர்கள் அல்ல. முகவருக்கும் உங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம், கட்டணம் ஆகியவற்றை நீங்கள் முகவருடன் தெளிவாகப் பேசி முடிவு செய்யுங்கள்.

8. கட்டணம்

போன் / WhatsApp மூலம் தரும் முதல் ஆலோசனை இலவசம். தளத்தில் பதிவு செய்வது, நிலம் விற்க பதிவு, நிலம் தேவை பதிவு ஆகியவற்றுக்கு கட்டணம் இல்லை. வேறு சேவைக்குக் கட்டணம் இருந்தால், அதை முன்பே உங்களுக்குத் தெரிவித்து, உங்கள் ஒப்புதலுக்குப் பின்னரே தொடர்வோம்.

9. புகார்

தவறான பதிவு, தவறான விலை, முகவர் நடத்தை போன்ற எந்தப் பிரச்சினைக்கும் தளத்தின் கீழே உள்ள "புகார்" பொத்தானை பயன்படுத்துங்கள். உங்களுக்கு ஒரு புகார் எண் (CMP-XXXXXX) கிடைக்கும்.

10. மாற்றங்கள் & சட்ட எல்லை

இந்த விதிமுறைகளை நாங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்; புதிய தேதியுடன் இங்கே வெளியிடுவோம். இந்த விதிமுறைகள் தொடர்பான தகராறுகள் இந்திய சட்டத்துக்கு உட்பட்டவை; செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றங்களுக்கு எல்லை உண்டு.

தொடர்புக்கு

தொலைபேசி / WhatsApp: +91 70108 80360
மின்னஞ்சல்: nilamlink.in@gmail.com

← முகப்புப் பக்கம்