Nilamlink logo Nilamlink

தனியுரிமைக் கொள்கை

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: அக்டோபர் 2026

Nilamlink (“நாங்கள்”, “எங்கள்”) இந்த வெப்சைட்டையும் செயலிகளையும் பயன்படுத்தும் உங்கள் தனியுரிமையை மதிக்கிறது. இந்த கொள்கை, நீங்கள் எங்கள் விசாரணை படிவத்தைப் பயன்படுத்தும்போதும், நில முகவராகவோ சொத்து உரிமையாளராகவோ தொடர்பில் வரும்போதும் நாங்கள் என்ன தகவலை சேகரிக்கிறோம், எதற்காக பயன்படுத்துகிறோம், எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதை விளக்குகிறது. தகவலை வழங்குவதன் மூலம் இந்தக் கொள்கைக்கு நீங்கள் சம்மதிக்கிறீர்கள்.

1. நாங்கள் சேகரிக்கும் தகவல்

2. இந்த தகவலை நாங்கள் எதற்காக பயன்படுத்துகிறோம்

உங்கள் தகவலை நாங்கள் விற்பனை செய்வதோ, மூன்றாம் தரப்பினருக்கு விளம்பர நோக்கத்திற்காக பகிர்வதோ இல்லை.

3. நில முகவர் & உரிமையாளர் தகவல் பாதுகாப்பு

எங்கள் கொள்கையின்படி, நில முகவர்களின் தனிப்பட்ட மொபைல் எண் வெப்சைட்டில் பொதுவில் காட்டப்படாது. அனைத்து WhatsApp/அழைப்பு தொடர்புகளும் நிறுவனத்தின் எண் (+91 70108 80360) வழியாகச் செல்லும். உரிமையாளர் விவரங்கள் பொதுவில் காட்டப்படாது. ஒரு சொத்துக்கு உரிமையாளரின் ஒப்புதல் முழுமையாக உறுதிசெய்யப்படாதபோது, அதன் கிராமம், இருப்பிடக் குறியீடு, புகைப்படங்கள் போன்ற அடையாளம் காட்டும் விவரங்கள் பொதுப் பக்கத்தில் காட்டப்படாது.

"நிலம் தேவை" பகுதி: நீங்கள் படிவத்தில் தனியாகச் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே, உங்கள் தேவையின் நில வகை, வட்டம்/மாவட்டம், பட்ஜெட் வரம்பு, தேவை எண் (REQ) ஆகியவை உங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் இல்லாமல் இணையதளத்தில் காட்டப்படும். எங்கள் குழு சரிபார்த்த பிறகே காட்டப்படும்; 60 நாட்களுக்குப் பிறகு தானாக மறையும். எந்த நேரமும் அதை நீக்கக் கோர +91 70108 80360 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். "நில முகவர்கள்" எண்ணிக்கைப் பட்டியலில் பகுதி வாரியான எண்ணிக்கை மட்டுமே காட்டப்படும்; முகவர்களின் பெயர் அல்லது எண் காட்டப்படாது.

நில முகவர்கள் Nilamlink-ன் ஊழியர்கள் அல்ல; அவர்கள் சுதந்திரமாகச் செயல்படுபவர்கள். நிலம்360 பெயரில் எந்த முகவருக்கும் முன்பணம் அல்லது கட்டணம் செலுத்த வேண்டாம்.

4. தகவலைப் பகிர்தல்

எங்கள் சேவையை வழங்க உதவும் தொழில்நுட்பச் சேவை வழங்குநர்களுடன் (எ.கா. தரவு சேமிப்புக்கான Supabase, ஊர் பெயருக்கான OpenStreetMap, புள்ளிவிவரங்களுக்கான Google Analytics, தொடர்புக்கான WhatsApp) தேவையான அளவு மட்டும் தகவல் பகிரப்படலாம். சட்டப்படி அல்லது அரசு அதிகாரிகளின் முறையான கோரிக்கையின்படி தேவைப்படும்போதும் பகிரலாம். நீங்கள் கோரிய சொத்து தொடர்பாக, உங்கள் பெயர் மற்றும் தேவையை சம்பந்தப்பட்ட நில முகவருடன் பகிரலாம்.

5. தகவல் பாதுகாப்பு மற்றும் சேமிப்புக் காலம்

உங்கள் தகவல் Supabase தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டு, அணுகல் கட்டுப்பாடு (Row-Level Security) மூலம் நிர்வாகி (admin) அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அணுக முடியும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எந்த இணைய அமைப்பும் முழுமையாகப் பாதுகாப்பானது என்று உறுதியளிக்க முடியாது; நியாயமான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்கிறோம். தகவலை நோக்கத்திற்குத் தேவையான காலம் வரை, அல்லது சட்டப்படி வைத்திருக்க வேண்டிய காலம் வரை மட்டும் வைத்திருப்போம்.

6. Cookies & Analytics

வெப்சைட் பயன்பாட்டை புரிந்துகொள்ள Google Analytics (GA4) பயன்படுத்தப்படுகிறது. இது முக்கியமாகத் தொகுப்பு (aggregate) புள்ளிவிவரங்களை சேகரிக்கிறது. உங்கள் உலாவி அமைப்புகள் மூலம் cookies-ஐ நிர்வகிக்கலாம்.

7. மொபைல் ஆப் (Android)

Nilamlink மொபைல் ஆப் வெப்சைட்டில் உள்ள அதே தகவல்களையே பயன்படுத்துகிறது.

தகவலை நீக்கக் கோர: நீங்கள் அனுப்பிய விசாரணை அல்லது தகவலை நீக்க விரும்பினால் WhatsApp (+91 70108 80360) அல்லது nilamlink.in@gmail.com வழியாகத் தெரிவிக்கவும்; நியாயமான காலத்தில் நீக்கப்படும்.

8. உங்கள் உரிமைகள் & குறைதீர்ப்பு

உங்கள் தகவலை பார்க்க, திருத்த அல்லது நீக்க விரும்பினால், அல்லது உங்கள் சொத்து அல்லது தகவல் உங்கள் அனுமதி இல்லாமல் எங்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கருதினால், எங்களை WhatsApp (+91 70108 80360) அல்லது nilamlink.in@gmail.com வழியாக தொடர்பு கொள்ளவும். உங்கள் புகார் குறித்து நியாயமான காலக்கெடுவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

9. கொள்கை மாற்றங்கள்

இந்த கொள்கை காலப்போக்கில் புதுப்பிக்கப்படலாம். முக்கியமான மாற்றங்கள் இந்த பக்கத்தில் தெரிவிக்கப்படும்.

← முகப்புக்கு திரும்ப